தாசில்தார் சகாயராணி முன்னிலை வகித்தார். கே.பி.சங்கர் எம்எல்ஏ கலந்துகொண்டு 17 குடும்ப தலைவர்களுக்கும் பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்கினார். பின்னர் சாதி சான்றிதழ் பெற்றவர்கள் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு வாக்காளர் அடையாள அட்டைக்கான ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டது. இந்த சாதி சான்றிதழ் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை வைத்து தங்களுக்கு தேவையான ஆதார் அடையாள அட்டை மற்றும் தமிழக அரசின் சலுகைகளை எளிதாக இவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது, வருவாய் ஆய்வாளர் பழனியராஜன், கிராம நிர்வாக அலுவலர் சுப்ரியா, மண்டல உதவி ஆணையர் விஜயபாபு, செயற்பொறியாளர் பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.
The post 17 குடும்பங்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் appeared first on Dinakaran.
