சென்னை: அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.மோகன்தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்துள்ளார். ஞானசேகரனுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.