ஆறுமுகநேரி, பிப். 6: ஆறுமுகநேரி ஏஐடியுசி காலனி வெள்ளி விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி காலை கணபதி ஹோமம், ருத்ர சமக புருஷ ஸூக்தாதி ஜெபம் நடந்தது. இதனைத் தொடர்ந்து கும்பம் எழுந்தருளி விமான அபிஷேகம், தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது. விழாவில் ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணை தலைவர் கல்யாணசுந்தரம், அரசு மருத்துவர் பாபநாசகுமார், கே.ஏ.மேல்நிலைப்பள்ளி கல்வி சங்க பொருளாளர் பாஸ்கரன், ஏஐடியுசி காலனி குடியிருப்பு கமிட்டி தலைவர் கார்த்திகேயன், செயலாளர் அரிச்சந்திரராஜ், செல்லப்பா, கார்த்தீசன், குமார், மாரிமுத்து, ஆனந்தக்கூத்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாலையில் மகா கணபதி சகஸ்ர நாம அர்ச்சனையும், தீபாராதனையும் நடந்தது.
The post ஆறுமுகநேரி கோயில் வருஷாபிஷேக விழா appeared first on Dinakaran.
