பொன்னமராவதி,பிப்.4: பொன்னமராவதி பள்ளிவாசலில் மதரஸா மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. திருமயம் வட்டார உலமா சபை மற்றும் அனைத்து பள்ளி வாசல்கள் இணைந்து நடத்திய அனைத்து மதரஸா மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி பொன்னமராவதி இந்திராநகர் பள்ளிவாசலில் நடைபெற்றது. ஹமீம்முஸ்தபா ஹஜ்ரத் மற்றும் இந்திராநகர் ஜமாத் தலைவர் சரிப்முகமது தலைமை வகித்தார். குழந்தை ஜிப்ரான் கிரா அத் ஓதி நிகழ்வை தொடங்கி வைத்தார்.
மாணவ, மாணவியர்கள் தங்களது கல்வித் திறமைகளை வெளிப்படுத்தி பேசினர். இந்த நிகழ்வை தாரிக் உலவி ஹஜ்ரத் தொகுத்து வழங்கினார். அனைத்து ஆலிம்களும் வாழ்த்துரை வழங்கினர். இந்திராநகர் ஜமாத் நிர்வாகிகள், இஸ்லாமிய இளைஞர்அணி நிர்வாகிகள் மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.முடிவில் இமாம்இப்ராஹிம் ஜவாஹிரி நன்றி கூறினார்.
The post பொன்னமராவதி பள்ளிவாசலில் மதரஸா மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.
