வத்தலக்குண்டு, பிப். 5: வத்தலக்குண்டு மதிமுக ஒன்றியம், பேரூர் சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள் நிகழ்வு நடந்தது. வடக்கு ஒன்றிய செயலாளர் மருது ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் சதீஷ், மாவட்ட நிர்வாகி பிரிஜிட், மாவட்ட துணை செயலாளர் ஆரோக்கியமேரி, மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் மூர்த்தி, மாவட்ட பிரதிநிதி செந்தில் முன்னிலை வகித்தனர்.
பேரூர் பொருளாளர் கணேசன் வரவேற்றார். நிகழ்வில் அண்ணா உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் சேவுகம்பட்டி துணை செயலாளர்கள் திருப்பதி, ராஜபாண்டி, விவசாய அணி பெருமாள், முருகேசன், கருணாகரன், நிர்வாகிகள் விஜயகுமார், சுதாகர், நாகராஜ், மதலை முத்து அர்ஜீன், பிரபாகரன், மருது, பரமேஸ்வரன், திவாகர், நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
The post அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.
