கேரளா முதல்வர் பினராயி விஜயன்: இந்த பட்ஜெட்டில் ரூ.24 ஆயிரம் கோடி கோரியிருந்தோம். ஆனால், கேரளாவின் கோரிக்கைகள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. வயநாடு பேரழிவுக்கு கூட நிதி ஒதுக்கவில்லை. இது அரசியலமைப்பின் கூட்டமைப்பு கொள்கைகளுக்கு எதிரானது.
கர்நாடகா முதல்வர் சித்தராமையா: நிதியமைச்சர் நிர்மலாவிடம் பல கோரிக்கைகளை வைத்தோம். ஆனால், அவர் கர்நாடகாவுக்கு காலி சொம்பை கொடுத்துள்ளார். நாட்டிலேயே அதிக வரி வசூலித்து தருவதில் 2வது இடத்தில் உள்ள கர்நாடகாவுக்கு ஒன்றும் தரவில்லை.
திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி: மேற்கு வங்க மாநிலத்துக்கு இந்த பட்ஜெட்டில் எதுவுமே அறிவிக்கப்படவில்லை. பாஜவின் கண்ணுக்கு பீகார் மட்டுமே தெரிகிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா செய்தி தொடர்பாளர் மனோஜ் பாண்டே: ஜார்க்கண்ட் மாநிலத்தை ஒட்டு மொத்தமாக புறக்கணித்துள்ளார்கள். ஒன்றிய அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை கண்டிக்கத்தக்கது.
The post நிர்மலா தந்த காலி சொம்பு appeared first on Dinakaran.
