ஆறுமுகநேரி, பிப். 1: ஆறுமுகநேரி பெர்ல்ஸ் பப்ளிக் பள்ளியின் 12வது ஆண்டு விழா, நாளை (2ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு பள்ளி வளாகத்தில் நடக்கிறது. பள்ளியின் சேர்மன் சுப்பையா தலைமை வகிக்கிறார். அன்பு அம்மாள் அறக்கட்டளை பொருளாளர் உஷா சுப்பையா, பள்ளியின் பொதுமேலாளர் மபத்லால், ராஜகுமாரி மபத்லால், பள்ளி டிரஸ்டி பிரபு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பள்ளி முதல்வர் கிறிஸ்டினா பிரபாகரன் வரவேற்று பேசி ஆண்டறிக்கையை வாசிக்கிறார். சிறப்பு அழைப்பாளராக நடிகரும், தொகுப்பாளருமான கணேஷ் வெங்கட்ராமன் கலந்து கொள்கிறார். விழாவில் பரிசளிப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. துணை முதல்வர் முத்துஜா பாலசுந்தரம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். பொது மேலாளர் மபத்லால் நன்றி கூறுகிறார். விழாவில் முக்கிய பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாணவ, மாணவியரின் பெற்றோர் உள்பட திரளானோர் கலந்து கொள்கின்றனர்.
The post ஆறுமுகநேரி பெர்ல்ஸ் பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.
