சேந்தமங்கலம், ஜன.30: சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட அலுவலகத்தில், சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமை உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார். இதில் கொல்லிமலை, சேந்தமங்கலம் வட்டார பகுதிகளில் பணியாற்றும் நெடுஞ்சாலை பணியாளர்களுக்கு கண் மற்றும் உடல் பரிசோதனை நடந்தது. முகாமில், சேந்தமங்கலம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் ஜெயந்தி சந்திரசேகரன் தலைமையில் மருத்துவக் குழுவினர் சர்க்கரை, ரத்த அழுத்தம், காது, மூக்கு, தொண்டை செயல்பாடு, கண் பார்வை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு இலவசமாக மருந்து, மாத்திரைகளை வழங்கினர். முகாமில், உதவி பொறியாளர் பிரனேஷ், இளநிலை உதவி பொறியாளர் சுப்ரமணியம், சாலை ஆய்வாளர்கள் பொன்னுசாமி, வெங்கடாஜலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post இலவச மருத்துவ முகாம் appeared first on Dinakaran.
