அவரை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருக்கும்படி ஜாகிர் கூறியுள்ளார். அதன்படி, அங்கு காத்திருந்தபோது, சஹிதா பேகத்தின் 8 வயது மகன் திடீரென மாயமானான். ரயில் நிலையம் முழுவதும் தேடியும் மகன் கிடைக்கவில்லை. இதுகுறித்து சாஹிதா பேகம் சென்ட்ரல் ரயில் நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆய்வாளர் கோவிந்தராஜ் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
அப்போது, சிறுவனை சில பெண்கள் அழைத்து செல்வது தெரிந்தது. தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டபோது, அந்த சிறுவன் ஆந்திர மாநிலம் குண்டூரில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் தனிப்படையினர் நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் குண்டூர் சென்று கடத்தி வைத்திருந்த சிறுவனை மீட்டு சென்னை அழைத்து வந்தனர்.
மேலும், சிறுவனை கடத்தியதாக 5 பெண்களை கைது செய்து சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணையில் அவர்கள், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சரஸ்வதி (40), சாசவதி (30), குண்டூரை சேர்ந்த வீரஞ்சம்மா (48), உமா (40), அஞ்சனம்மா (32) என்பதும், இவர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சிறுவனை ஆந்திர மாநிலத்திற்கு கடத்திச் சென்று, பிச்சை எடுப்பதற்கு பழக்கி வந்தது தெரிய வந்தது.
The post ஆந்திராவில் பிச்சை எடுப்பதற்காக சென்னை சென்ட்ரலிலிருந்து கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு: 5 பெண்கள் கைது appeared first on Dinakaran.
