இலங்கை அரசு அதிரடி: அதானி மின்திட்டங்களை மறுஆய்வு செய்ய குழு

புதுடெல்லி: இந்திய தொழிலதிபர்களில் ஒருவரான அதானிக்கு சொந்தமான நிறுவனம் இலங்கையில் மன்னார், பூனேரி மாவட்டங்களில் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிபர் அனுர குமார திசநாயக தலைமையில் இலங்கை அமைச்சரவை கூட்டம் கூடியது. அப்போது மன்னார், பூனேரி மாவட்டங்களில் அதானி குழுமம் மேற்கொள்ள இருக்கும் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வௌியாகின. இதனால் இந்திய பங்குச்சந்தையின் அதானி கிரீன் எனர்ஜியின் பங்குகள் 6% வீழ்ச்சியடைந்தன.

இந்நிலையில் மன்னார், பூனேரியில் அதானி குழுமம் மேற்கொள்ள உள்ள காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் குறித்து மறுஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அரசு அதிகாரி நலிந்த ஜயதிஸ்ச, “மன்னார், பூனேரியில் அதானியின் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை ரத்து செய்வது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மாறாக அதுபற்றி மறுபரிசீலனை செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் தங்கள் பணியை தொடங்கி உள்ளனர். ஆய்வு பணிகள் முடிந்ததும் முடிவெடுக்கப்படும்” என்று கூறினார்.

The post இலங்கை அரசு அதிரடி: அதானி மின்திட்டங்களை மறுஆய்வு செய்ய குழு appeared first on Dinakaran.

Related Stories: