இதில் மற்றொரு முக்கிய குற்றவாளியான பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாதியான தஹாவூர் ஹூசைன் ராணா (63) என்பவரை இந்திய அரசாங்கம் தீவிரமாக தேடிவந்த நிலையில், இவர் கனடா குடியுரிமை பெற்று அமெரிக்காவில் தலைமறைவாக இருந்தார்.இந்தியாவால் தேடப்பட்ட குற்றவாளியான தஹாவூர் ஹூசைன் ராணாவை 2009ல் குற்றவழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தது அமெரிக்கா. ராணாவை நாடு கடத்த வேண்டும் என இந்தியா கோரி வந்த நிலையில் அதற்கு தடை விதிக்க கோரி அவர் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரின் கோரிக்கையை ஏற்க கூடாது என அமெரிக்க அரசே பதில் மனு தாக்கல் செய்தது.
அமெரிக்க அரசின் கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்றம் ராணாவின் நாடு கடத்துவதை தடுக்க கோரும் மனுவை தள்ளுபடி செய்தது. குற்றவாளிகளை பரஸ்பரம் ஒப்படைக்கும் ஒப்பந்தம் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே ஏற்கெனவே அமலில் உள்ள நிலையில், அதன் அடிப்படையில் ராணா நாடு கடத்தப்படுகிறார். ராணா விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட வாய்ப்புள்ளது
The post 166 அப்பாவி மக்கள் பலியான மும்பை தாக்குதல் குற்றவாளி தஹவ்வூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் பச்சைக்கொடி!! appeared first on Dinakaran.