டெல்லி சர்வதேச விமான நிலையம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது; புதுப்பிக்கப்பட்ட விமான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு பயணிகள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள். ஏதேனும் அசவுகரியம் ஏற்பட்டால் அதற்காக வருந்துகிறோம் என்று தெரிவித்துள்ளது. டெல்லியில் பனிமூட்டம் தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 11°செல்சியசாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
The post டெல்லியில் கடும் பனிமூட்டம்; விமானங்கள், ரயில்கள் வருகையில் தாமதம்: பயணிகள் அவதி! appeared first on Dinakaran.
