மமக ஆண்டு துவக்க விழா

 

தொண்டி, ஜன.24: மமக 17ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தொண்டி கடற்கரை சாலை, எஸ்.பி. பட்டிணம், பாசிபட்டிணம், பி.வி.பட்டிணம், எம்.ஆர்.பட்டிணம், தொண்டி பழைய பஸ் ஸ்டாண்ட், நம்புதாளை, வீரசங்கிலிமடம், தேவிபட்டிணம் ஆகிய இடங்களில் மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமையில் கொடி ஏற்றம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி, முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் பொறியாளர் ஜாவித் அசாம், பனைக்குளம் அசன், தொண்டியராஜ் யாண்பு இப்ராஹிம் நிசார் அஹமது ஆகிய மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட அணி நிர்வாகிகள் ஒன்றிய பேரூர் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மமக மாநில துணை பொதுச்செயலாளர் தஞ்சை பாதுஷா, தமுமுக மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா, தமுமுக தலைமை பிரதிநிதி மண்டலம் முஹம்மது ஜெய்னுலாபுதீன் மமக கொடியை ஏற்றி வைத்து செயல்பாடுகள் குறித்து பேசினர். தொண்டி 15வது வார்டு பேரூர் கவுன்சிலர் பெரியசாமி உட்பட பலர் மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் தஞ்சை பாதுஷா முன்னிலையில் இணைந்தனர்.

 

The post மமக ஆண்டு துவக்க விழா appeared first on Dinakaran.

Related Stories: