கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே தாண்டவன்குளம் கிராமத்தில் இடிந்து வழும் நிலையில் உள்ள பஸ் நிறுத்த கட்டிடத்தை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரிலிருந்து திருமயிலாடி, கொப்பியம்,மாதானம் வழியாக புதுப்பட்டினம் செல்லும் நெடுஞ்சாலையில் தாண்டவன்குளம் கிராமத்தில் பஸ் நிறுத்த கட்டிடம் உள்ளது. இக் கட்டிடம் கட்டப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் ஆன நிலையில் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் இருந்து வருகிறது.
இக்கட்டிடத்தில் உள்ள ஜன்னல்கள் முற்றிலும் அகற்றப்பட்டு விட்டன. கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழும் தருவாயிலும், சுவர்கள் விரிசல் விழுந்து எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் இருந்து வருகின்றது. பஸ் நிறுத்த கட்டிடம் அமைந்துள்ள பகுதியில் சிறுவர்கள் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் வரை வந்து செல்லும் இடமாகவும் பஸ்சுக்கு அப் பகுதியைச் சேர்ந்தவர்கள் காத்திருக்க வேண்டிய இடமாகவும் இருந்து வருகிறது.
திடீரென இந்த கட்டிடம் இடிந்து விழுந்தால் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்படலாம்.எனவே எந்த பயனும் இன்றி இடிந்து விழும் ஆபத்தான நிலையில் இருந்து வரும் பழமையான பஸ் நிறுத்த கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post கொள்ளிடம் அருகே தாண்டவன்குளம் கிராமத்தில் இடிந்து விழும் ஆபத்தான பஸ் நிறுத்த கட்டிடத்தை அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.
