இந்த திட்டத்தில் கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டருக்கும், மாதவரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் வழித்தடம் அமைய உள்ளது. வழக்கமாக, அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் சென்னை மெட்ரோ ரயிலில் அதிகளவிலான மக்கள் கூட்டம் இருக்கும். சென்னையில் முக்கிய போக்குவரத்தாகவும் மெட்ரோ ரயில் போக்குவரத்தானது இருந்து வருகிறது. நாளுக்கு நாள் மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் கூட்டம் அதிகரித்து கொண்டே போகிறது. இந்த நிலையில், புறநகர் மின்சார ரயில் மற்றும் பேருந்துகளில் காலை நேரத்தில் பயணிக்கும் சிலர் இருக்கையில் அமர்ந்தபடியே சாப்பிடுவதை போல், மெட்ரோ ரயிலிலும் பலர் சாப்பிடுவதாகவும், இதனால், சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் புகார் வந்தது.
இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், சென்னை மெட்ரோ ரயிலுக்குள் உணவு உட்கொள்ள அனுமதி இல்லை. எனவும், சுமுகமான, இனிமையான பயணத்தை உறுதி செய்ய விதிகளை பின்பற்றவும் என தெரிவிகக்ப்பட்டுள்ளது. மெட்ரோ விதிகளை பின்பற்ற மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். தொடர்ந்து பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்கள் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மெட்ரோ ரயில்களும் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மக்கள் தொடர்ந்து இதுபோல் விதிகளை பின்பற்றினால் தூய்மையான மெட்ரோ ரயில் பயணத்தை மேற்கொள்ளலாம் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
The post மெட்ரோ ரயிலில் சாப்பிடுவதற்கு தடை: நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.
