சிவகிரி, ஜன.21: தென்மலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. வாசுதேவநல்லூர் யூனியன் தென்மலையில் அரசின் நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டு உள்ளது. எட்டுச்சேரி, இனாம் கோவில்பட்டி, வடுகப்பட்டி, துரைச்சாமியாபுரம், பனையூர், இடையன்குளம், கோதைநாச்சியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நெல்லை நேரடியாக கொள்முதல் செய்யும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அமைக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தை யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தொடக்கி வைத்தார். எழுத்தர் முத்துக்குமார், விவசாய சங்க செயலாளர் பாபுராஜ், சந்தனகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் மீனலதா வரவேற்றார். திமுக மாவட்ட துணை செயலாளர் மனோகரன், பேரூராட்சி கவுன்சிலர் விக்னேஷ் ராஜா, விவசாய சங்க தலைவர் காளிமுத்து, பொருளாளர் குருசாமி, கிளை செயலாளர் கருத்தபாண்டியன், முன்னாள் ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் குமார், முத்தரசு பாண்டியன், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post தென்மலையில் நெல் கொள்முதல் நிலையம் appeared first on Dinakaran.
