காஞ்சிபுரத்தில் 3 டன் செங்கரும்பில் காளை மாடுகள், வண்டி வடிவமைத்து பொங்கல் கொண்டாடி விவசாய குடும்பத்தினர் அசத்தல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 3 டன் செங்கரும்பில் காளை மாடுகள், வண்டி ஆகியவற்றை வடிவமைத்து பொங்கல் கொண்டாடி விவசாயி குடும்பத்தினர் அசத்தியுள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த கீழ்க்கதிப்பூர் குண்டுகுளம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்-செல்வி தம்பதியினர். இவர்கள், விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா கொண்டாடி வருகின்றனர். விவசாயத்தை போற்றும் வகையிலும் இளைய தலைமுறையினரியே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் செங்கரும்பிலான பிரமாண்ட பானை, ஜல்லிக்கட்டு காளை, பிரதமர் மோடியின் உருவம், பாரம்பரிய குடிசை குடில் என ஆண்டுதோறும் ஒவ்வொரு விதமான வடிவங்களை 3 டன் செங்கருப்பில் வடிவமைத்து பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில், இந்தாண்டு விவசாயத்தையும், அழிந்து வரும் காளை மாடுகளையும், மாட்டு வண்டிகளையும் கவுரவித்து இளைய தலைமுறையினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த ஒரு வாரமாக 3 டன் எடையுள்ள செங்கரும்பில் மாட்டு வண்டி, 5 அடி உயரமுள்ள 2 காளை மாடுகளை உருவாக்கி வண்டியில் பூட்டி மாட்டு பொங்கலை பாரம்பரிய முறைப்படி விவசாய குடும்பத்தினர் கொண்டாடி மகிழ்ந்தனர். செங்கரும்பிலான மாட்டு வண்டி, காளை மாடுகள் அமைத்து விவசாய குடும்பத்தினர் வணங்குவதையறிந்ததும் அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

The post காஞ்சிபுரத்தில் 3 டன் செங்கரும்பில் காளை மாடுகள், வண்டி வடிவமைத்து பொங்கல் கொண்டாடி விவசாய குடும்பத்தினர் அசத்தல் appeared first on Dinakaran.

Related Stories: