மதுராந்தகம்: ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் நடந்த, பொங்கல் விழா விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அதன் தலைவர் கோ.ப.அன்பழகன் பரிசுகளை வழங்கினார். மேல்மருவத்தூர் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில், தைத்திருநாள் பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் காணும் பொங்கல் தினமான நேற்று மேல்மருவத்தூர் ஜிபி விளையாட்டு திருடலில் நடைபெற்றது. அதில், ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், கபடி, கைப்பந்து, உள்ளிட்ட போட்டிகள் இருபாலருக்கும் நடைபெற்றது. இதில், கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.20 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.15 ஆயிரம், கபடி போட்டியில் முதல் பரிசு ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.10 ஆயிரம் கோப்பை ஆகியவற்றை ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத் தலைவர் கோ.ப.அன்பழகன், மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் அகத்தியன் ஆகியோர் வழங்கினர்.
இந்த போட்டிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, பாண்டிச்சேரி, வந்தவாசி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 1200க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரை, டாக்டர் ஷாலினி அகத்தியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் நிர்வாகிகள் லிங்கநாதன், சிவக்குமார், சுந்தரம், சக்தி கோபி, சரளா ஆகியோர் செய்து இருந்தனர்.
The post ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் பொங்கல் விழா விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு: அன்பழகன் பரிசுகள் வழங்கினார் appeared first on Dinakaran.