திருக்கழுக்குன்றம், டிச.22: திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் திமுக பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மன்ற தலைவரும், பேரூர் செயலாளருமான யுவராஜ் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணை தலைவர் அருள்மணி, கவுன்சிலர்கள் சத்தியமூர்த்தி, பழனி, தௌலத் பீ, தேன்மொழி இளங்கோ, பேரூர் துணை செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன் பாக முகவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகளிடையே பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், அனைவருக்குமே கூட்டம் வரும், ஆனால் கூட்டம் சேர்ப்பது பெரிய விஷயம் அல்ல. கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞரணி சார்பில் நமக்கு ஒரு பகுதிதான் கூட்டம் சேர்ந்தது.
தமிழகம் முழுவதும் இளைஞரணி கூட்டம் எல்லாம் ஒன்று சேர்ந்தால் என்னவாகும் என தவெக தலைவர் நடிகர் விஜய்யை விமர்சித்து பேசினார். கூட்டத்தில் நிர்வாகிகள் கோபால், செங்குட்டுவன், இளங்கோ, ஷெரீப், விவேகானந்தன், ரத்னவேல், அகமது பாஷா, அழகிரி, அரவிந்தன், சுடர்வண்ணன், அன்புமணி, மணிவண்ணன், ரவிச்சந்திரன், பாலாஜி, தயாளன், ரவி, வாசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
