அப்போது, மாமல்லபுரம் பூஞ்சேரி, அம்பாள் நகர், பெருமாளேரி, வடகடம்பாடி, நல்லான் பிள்ளை பெற்றாள், குச்சிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கற்பூரம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் பெருமாளை வழிபட்டனர். பின்னர், குழிப்பாந்தண்டலம் கிராமத்துக்கு மாலை 4 மணிக்கு வந்த தலசயன பெருமாள்-சக்கரத்தாழ்வாருக்கு பால், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகிய பொருட்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், தலசயன பெருமாள் முயல் வேட்டையில் ஈடுபட்டு, ராஜ அலங்காரத்தில் குழிப்பாந்தண்டலத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். விழாவுக்கான, ஏற்பாடுகளை குழிப்பாந்தண்டலம் கிராமத்தார் சிறப்பாக செய்திருந்தனர். இதில், தலசயன பெருமாள் கோயில் மேலாளர் சந்தானம், பட்டாச்சாரியார்கள், கிராம பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
The post குழிப்பாந்தண்டலத்தில் பாரிவேட்டை உற்சவம் கோலாகலம் appeared first on Dinakaran.
