சென்னை: சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்கும் கிராமிய கலைஞர்களுக்கான ஒருநாள் ஊதியம் ரூ.5,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கு இணங்க தமிழ்ப்பண்பாட்டை வளர்க்கும் ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சி கடந்த 3 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து முடிந்ததையடுத்து, இந்தாண்டிற்கான சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியினை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார். சென்னை சங்கமம் -நம்ம ஊரு திருவிழாவில் பங்குபெறும் கிராமியக் கலைஞர்களுக்கு தங்கும் இடம், உணவு, 2 உடைகள், போக்குவரத்து வசதிகள் உட்பட அனைத்தும் தமிழ்நாடு அரசால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இது தவிர அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு நாள் ஊதியத்தை ரூ.5000 ஆக உயர்த்தி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய அறிவிப்பு, கிராமிய கலைஞர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்கும் கிராமிய கலைஞர்களுக்கு ஒருநாள் ஊதியம் ரூ.5,000: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.