சீன பிரதமர் லீ கியாங் மற்றும் சீன தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழு தலைவர் ஜாவோ லெஜி ஆகியோரையும் இலங்கை அதிபர் சந்திக்க உள்ளார். விவசாயம், சுற்றுலா , கல்வி மற்றும் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கையெழுத்திட உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இலங்கையின் இரண்டு அரசு தொலைக்காட்சியை டிஜிட்டல் மயமாக்குவது, மத்திய விரைவு சாலை திட்டத்தை முடிக்க சீனாவின் உதவியை கோருவது, ஹம்பந்தோட்டா சீன தொழில்துறை மண்டலம் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
The post இரு நாட்டு உறவை வலுப்படுத்த சீன, இலங்கை அதிபர்கள் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.