ஈரான் டிரோன் தாக்குதல் அச்சுறுத்தல் பாக்.கில் உள்ள தூதரக ஊழியர்களை திரும்ப அழைத்தது அமெரிக்கா

இஸ்லாமாபாத்: ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். அதே போல் பாகிஸ்தானில் உள்ள ஐநா அலுவலகமும் சூறையாடப்பட்டது. இந்த தாக்குதல்களை தொடர்ந்து பாகிஸ்தான் கராச்சி,லாகூர் நகரங்களில் உள்ள துணை தூதரகத்தில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகள் தவிர இதர ஊழியர்களை திரும்ப அழைக்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கராச்சி, லாகூரில் துணை தூதரகங்களில் பணியாற்றும் முக்கியத்துவம் அல்லாத பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர் உடனே நாட்டுக்கு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரானின் டிரோன் தாக்குதல் மற்றும் வர்த்தக விமானங்களின் சேவைகளில் ஏற்பட்ட பாதிப்பை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு ஆசிய மோதல்களை தொடர்ந்து ஜோர்டான், பஹ்ரைன், ஈராக்,குவைத், கத்தார் உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள தூதரகங்களில் பணியாற்றும் ஊழியர்களை அமெரிக்க அரசு திரும்ப பெற்றுள்ளது.

Related Stories: