ஈரான் போரால் சர்வதேச அளவில் 21,000 விமானங்கள் முடக்கம் :இந்தியாவில் கடந்த 4 நாட்களில் 1,400 விமானங்கள் ரத்து

தெஹ்ரான் : மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் காரணமாக சர்வதேச அளவில் 21,000 விமானங்கள் முடக்கப்பட்ட நிலையில், பயண கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த 4 நாட்களில் 1,400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஈரான் நாட்டின் முக்கிய நகரங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஒருங்கிணைந்த வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்த நிலையில், சர்வதேச அளவில் இதுவரை 21,000 விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக துபாய், தோஹா மற்றும் அபுதாபி ஆகிய முக்கிய நகரங்களின் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், பல்லாயிரக்கணக்கான பயணிகள் தங்களின் பயணத்தை தொடர முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த வான்வழி பயண சிக்கலால் விமானங்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டி உள்ளதால் விமான எரிபொருள் செலவு மற்றும் இன்சூரன்ஸ் கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன. மும்பை, லண்டன் விமான பயண கட்டணம் ரூ.40,000 வரை இருந்த நிலையில், தற்போது ரூ.3 லட்சம் வரை உயர்ந்துள்ளது. பிசினஸ் கிளாஸ் டிக்கெட் விலை ரூ.9 லட்சம் என்ற உச்சத்தை தொட்டுள்ளது.

Related Stories: