எங்கள் படத்தில் சர்ச்சை இல்லை: வரலட்சுமி

சென்னை: ‘கொன்றால் பாவம்’ படத்தை தொடர்ந்து தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி, சந்தோஷ் பிரதாப், ஆரவ், விவேக், யாசர் நடித்துள்ள கிரைம் திரில்லர் படம், ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’. இதை தமிழ் ஆஹா ஓடிடி தளம் வழங்குகிறது. படம் குறித்து வரலட்சுமி கூறியதாவது: ‘கொன்றால் பாவம்’ படத்தின் மூலம் தயாள் பத்மநாபன், தான் எப்படிப்பட்ட இயக்குனர் என்பதை நிரூபித்துள்ளார். சிறிய படமாக இருந்தாலும் நல்ல கதை இருக்கும். இப்படத்திலும் அனைவருக்கும் பிடித்த கதை இருக்கும். இப்படத்தை ஏன் பார்க்கிறோம் என்று ஒரு இடத்தில் கூட ரசிகர்கள் நினைக்க மாட்டார்கள். திரில்லர் கதை கொண்ட இதை எப்படி திரைக்கதையாக்கி, முழுநீள படமாக உருவாக்கப் போகிறார்கள் என்ற சந்தேகமும், ஆச்சயரிமும் எங்களுக்கு இருந்தது. அந்த சந்தேகத்தை நீக்கி இப்படத்தை மிகச்சரியாக உருவாக்கியுள்ளனர். ஆரவ், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் என் நண்பர்கள் என்பதால், உடனே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். எங்கள் படத்தில் பெரிதாக சர்ச்சை என்பது இல்லை. இப்போதெல்லாம் படத்தில் ஏதாவது ஒரு சர்ச்சையை வைத்துவிடுகின்றனர். எங்கள் படத்தில் கதை மட்டுமே இருக்கிறது.

The post எங்கள் படத்தில் சர்ச்சை இல்லை: வரலட்சுமி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: