ஜி.பி. சாலையில் இருந்து அண்ணா சாலை நோக்கி வரும் வாகனங்கள் அண்ணா சாலை – ஜி.பி. சாலை சந்திப்பில் அனுமதிக்கப்படாமல் இடதுபுறம் திருப்பிவிடப்பட்டு எல்.ஐ.சி. எதிரில் யு திருப்பம் அனுமதிக்கப்பட்டு டேம்ஸ் சாலை நோக்கி செல்ல அனுமதிக்கப்படும். அண்ணா சாலை – வாலாஜா சந்திப்பு (அண்ணா சிலையில்) இருந்து வரும் அனைத்து வாகனங்களும் வழக்கம்போல் ஜி.பி. சாலையில் இடதுப்புறம் அனுமதிக்கப்பட்டு ராயப்பேட்டை மணிக்குண்டு வழியாக செல்லலாம். அண்ணா மேம்பாலத்திலிருந்து ஜி.பி. சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள், ஜி.பி. சாலையை அடைய மவுண்ட் ரோடு தர்கா (புகாரி ஓட்டல் அருகில்) யு திருப்பத்தில் அனுமதிக்கப்படும். மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்தினால் அண்ணா சாலையில் போக்குவரத்து குறைந்து வாகனங்கள் தங்கு தடையின்றி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post அண்ணா சாலையில் நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.
