வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பூக்கள் விலை அதிகரிப்பு

அண்ணாநகர்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் இரு மடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று அனைத்து பூக்களின் விலையும் இரு மடங்காக அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது.

அதன்படி, ஒரு கிலோ மல்லி ரூ.1,300ல் இருந்து ரூ.1,800க்கும், ஐஸ் மல்லி ரூ.1000ல் இருந்து ரூ.1,200க்கும், ஜாதி மல்லி ரூ.450ல் இருந்து ரூ.1,200க்கும், முல்லை ரூ.900ல் இருந்து ரூ.1,200க்கும், கனகாம்பரம் ரூ.800ல் இருந்து ரூ.1,200க்கும், அரளி ரூ.100ல் இருந்து ரூ.500க்கும், சாமந்தி ரூ.80ல் இருந்து ரூ.160க்கும், சம்பங்கி ரூ.120ல் இருந்து ரூ.200க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.160ல் இருந்து ரூ.240க்கும், பன்னீர் ரோஸ் ரூ.140ல் இருந்து ரூ.200க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘‘கடந்த 3 நாட்களுக்கு முன்பு விசேஷ நாட்கள் இல்லாததால் அனைத்து பூக்களின் விலை சரிந்து காணப்பட்டது. இந்நிலையில், வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு, அனைத்து பூக்களின் விலை இரு மடங்காக அதிகரித்தது. இது மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது,’ என்றார்.

The post வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பூக்கள் விலை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: