காரைக்கால், ஜன.9: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம் சனி பகவான் ஆலயத்தில் சனி பகவான் சனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.இங்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம்.இந்நிலையில் தமிழக மாநில தேர்தல் ஆணையரும் தமிழகத்தின் வீர சாகசம் புரிந்த பெண்களுக்கான கல்பனா சாவ்லா விருது பெற்ற முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரியுமான ஜோதி நிர்மலா சாமி தனது மகன் மருமகள் பேத்தியுடன் நேற்று சனிபகவான் கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.
முன்னதாக விநாயகர், முருகன் சன்னதிகளில் தரிசனம் செய்த பின்னர் பைரவர் சன்னதியில் சாமி தரிசனம் செய்த போது ஜோதி நிர்மலா சாமி அவர்களின் இரண்டு வயது பேத்தி மனம் உருக பிரார்த்தனை செய்தது வியந்து ரசித்துப் பார்த்தார். அதனைத் தொடர்ந்து மூலவர் தர்ப்பாரண்யேஸ்வர் சுவாமி அம்பாளை தரிசித்த பின்னர் சனி பகவனிடம் சிறப்பு தரிசனம் மேற்கொண்டு மனதுருகி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.பின்னர் ஆலயத்திற்கு சொந்தமான யானை பிரக்ருதியிடம் குடும்பத்துடன் ஆசி பெற்றனர்.
The post திருநள்ளாறு சனி பகவான் ஆலயத்தில் தமிழக மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலா சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.
