இந்திய விண்வெளித்துறையில் மகத்தான சாதனைகளை புரிவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது: இஸ்ரோவின் புதிய தலைவருக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து

சென்னை: இந்திய விண்வெளித்துறையில் மகத்தான சாதனைகளை புரிவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது என இஸ்ரோவின் புதிய தலைவருக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணன் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற விஞ்ஞானியான அவருக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசுப் பள்ளியில் படித்து, தனது அயராத உழைப்பினால் உயர்ந்த நிலைக்கு வந்தவர். அவருடைய வளர்ச்சி மிகவும் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது. சந்திராயன் 3 திட்டம் வெற்றி பெற சிறப்புடன் செயல்பட்டவர் வி. நாராயணன் .இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் தமிழகத்தின் பங்கு நீண்டகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வி. நாராணயன் இந்திய விண்வெளித்துறையில் மகத்தான சாதனைகளை புரிவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அவரது முயற்சி வெற்றி பெற தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post இந்திய விண்வெளித்துறையில் மகத்தான சாதனைகளை புரிவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது: இஸ்ரோவின் புதிய தலைவருக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: