திருச்சி ஜன.8: வணிகர்களுக்கு சொத்து வரி, சேவை வரி, தொழில் வரி, தொழில் உரிம கட்டணம், உணவு பாதுகாப்பு வரி தொழிலாளர் வரி, கடைகள் மீது மின் கட்டண உயர்வு என பல வரிகளையும் கட்டணங்களையும் உயர்த்திக் கொண்டே செல்வதை கண்டித்தும், ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வலியுறுத்தியும், தொழில் உரிம கட்டணத்தை 5 மடங்கு உயர்த்தியதை கண்டித்தும், ஜிஎஸ்டி வரி மீது அபராத வரி சுமத்தப்பட்டுள்ளது கண்டித்தும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்டம் மற்றும் பெரம்பலூர் தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை புதுக்கோட்டை மாவட்டங்கள் இணைந்து நடத்தும் ஆர்ப்பாட்டம் நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் சௌந்தர்ராஜன், மாநில பொதுச் செயலாளர் மெஸ்மர் காந்தன் வெள்ளையன், மாநில பொருளாளர் பீர்முகமது, செயல் தலைவர்கள் வியாசை மணி, மறையூர் கருப்பையா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி மாவட்ட தலைவர் ஹபிபுர் ரகுமான், செய்தி தொடர்பாளர் ஆல்பர்ட் அந்தோணி ஆகியோர் விளக்க உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மண்டலத்தைச் பல்வேறு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
The post ஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை கோரி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.