மண்பானை விற்பனை படுஜோர் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மறியல்

 

திருச்சி, ஜன.8: ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும், வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்கிட வேண்டும், கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கம் உள்ளிட்ட அனைத்து வீடுகள் கட்டும் திட்டங்களுக்கும் உரிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும், கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்தல் மற்றும் இதற்கான ஆணையம் அமைத்தல் வேண்டும், நிரந்தர ஊழியர் கட்டமைப்பு வசதிகளை மாநில மாவட்ட வட்டார அளவில் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை அறிவுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் திருச்சி மாவட்டம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் சிவ சகாயராஜ் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பால்பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார். போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

 

The post மண்பானை விற்பனை படுஜோர் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மறியல் appeared first on Dinakaran.

Related Stories: