போக்குவரத்து பாதிப்பு திருச்சி மாநகராட்சியுடன் அதவத்தூரை இணைக்க எதிர்ப்பு

 

திருச்சி, ஜன.7:திருச்சி மாநகராட்சியுடன் அதவத்தூர் கிராமத்தை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாநகராட்சி விரிவுப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி திருச்சி மாநகராட்சியுடன் அதவத்தூர், வயலூரும் இணைக்கப்படவுள்ளது. இந்நிலையில் மாநகராட்சியுடன் அதவத்தூரை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து சோமரசம்பேட்டை எம்ஜிஆர் சிலை அருகே இன்று 200க்கும் மேற்பட்ேடார் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். இதற்கு உடன்படாமல் அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சிலர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து எச்சரித்தனர். மதியம் வரை போராட்டம் நடந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் துறையூர் நகராட்சியுடன் சிங்களாந்தபுரம், சித்திரைப்பட்டியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

The post போக்குவரத்து பாதிப்பு திருச்சி மாநகராட்சியுடன் அதவத்தூரை இணைக்க எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: