இது கடந்த ஆண்டை விட காற்றாலை இதழ்கள் ஏற்றுமதி 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் சென்னை, பெங்களூரு, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் காற்றாலை இதழ்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளில் காற்றாலை நிறுவுவதற்காக தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை தூத்துக்குடி வஉசி துறைமுகம் மூலம் 1869 காற்றாலை இதழ்கள் ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. இது கடந்த ஆண்டு விட 40 சதவீதம் கூடுதலாகும். கடந்த ஆண்டு 1332 காற்றாலை இதழ்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது.
மேலும் கடந்த 2024 டிசம்பர் மாதம் மட்டும் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 294 காற்றாலை இதழ்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு 75 கப்பல்கள் மூலம் இந்த காற்றாலை இதழ்கள் அமெரிக்கா, துருக்கி, ஆஸ்திரேலியா, பின்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இந்த சாதனை புரிய துணை நின்ற துறைமுக ஏற்றுமதியாளர்கள் துறைமுக ஊழியர்கள் மற்றும் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் ஆகியோருக்கு துறைமுக நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
The post 2024ம் ஆண்டில் 1869 காற்றாலை இறகுகளை ஏற்றுமதி செய்து தூத்துக்குடி வஉசி துறைமுகம் புதிய சாதனை appeared first on Dinakaran.