டெல்லியில் 70 சட்டமன்ற தொகுதிகளுக்கு பிப்.5-ம் தேதி தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்துவது தேவையற்றது; மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் கருத்து தெரிவித்துள்ளார். 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டமன்றத்துக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் கூறியுள்ளார்.

70 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட டெல்லி யூனியன் பிரதேச சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவை 36 இடங்கள். டெல்லி தேர்தல் களத்தில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகியவை பிரதான கட்சிகளாக உள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 23 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பிப்.5-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. டெல்லியில் 10.01.2025 அன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் தாக்கல் செய்ய 17ம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலினை பிப் 18ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுவை திரும்ப பெற பிப்.20ம் தேதி கடைசி நாளாகும். டெல்லியில் 70 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் பிப்.8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

டெல்லியில் ஆண் வாக்காளர் 83.5 லட்சம், பெண் வாக்காளர் 71.7 லட்சம், மூன்றாம் பாலினத்தவர் 1261 வாக்காளர்கள் உள்ளனர். வாக்குப்பதிவின் போது தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். 2.08 லட்சம் முதல்முறை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்காக 13,033 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜன.10ம் தேதி தொடங்குகிறது.வேட்புமனு தாக்கல் செய்ய ஜன.17ம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜன. 18ல் நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜன.20ம் தேதி கடைசி நாளாகும். இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்

 

 

The post டெல்லியில் 70 சட்டமன்ற தொகுதிகளுக்கு பிப்.5-ம் தேதி தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: