விஜய் பிரச்சார பயணத்தில் தொடரும் விதி மீறல்: தடுப்புகளை தாண்டி தவெக தொண்டர்கள் ஓட்டம்

 

தஞ்சை: திருச்சியில் தவெக தலைவர் விஜய்யை பின்தொடர்ந்து சென்ற வாகனங்கள் விபத்தில் சிக்கின. விஜயை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் கார் மோதி படுகாயம் அடைந்தனர். போலீசார் எச்சரிக்கையையும் மீறி விஜய் வாகனத்தை தொண்டர்கள் பின்தொடர்ந்து செல்கின்றனர். விஜய்யின் ஒவ்வொரு பிரச்சார பயணத்திலும் விதிமீறல் தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே பிரச்சார கூட்டத்துக்கு விஜய் வந்ததும் க்யூ ஆர் கோடு இல்லாதவர்களும் தடுப்புகளை மீறி தொண்டர்கள் ஓட்டம் பிடித்தனர். பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று அறிவித்துவிட்டு பாஸ் இல்லாதவர்களை அனுமதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தடுப்புகளை உடைத்துக் கொண்டு பிரச்சார பகுதிக்கு ஓடும் தவெக தொண்டர்களால் பரபரப்பு நிலவி வருகிறது. ஆம்புலன்ஸுக்காக தடுப்புகளை திறப்பதுப்போல் திறந்து தொண்டர்களை உள்ளே அனுமதித்த தவெகவினர். எவ்வித கட்டுப்பாடும் ஒழுக்கமும் இல்லாமல் தவெக தொண்டர்கள் விஜய்யை பார்க்க அரங்குக்குள் ஓடியதால் நெரிசல் ஏற்பட்டது. எவ்வித கட்டுப்பாடும் ஒழுங்கும் இன்றி தடுப்புகளை தாண்டி தவெக தொண்டர்கள் அரங்கில் புகுந்தனர். கட்டுப்பாடுகளை மீறி தவெக தொண்டர்கள் ஓடியதால் இரும்புத் தடுப்புகள் கீழே விழுந்தன.

கீழே விழுந்த தொண்டரை தூக்காமல் சக தொண்டர்கள் அரங்கில் இடம்பிடிக்க ஓடினர். தவெகவினர் அத்துமீறி ஓடியதால் பெண் தொண்டர்கள் பீதி அடைந்தனர். தடுப்புகளை தாண்டி உள்ளே நுழைந்தபோது கீழே விழுந்த தொண்டருக்கு போலீசார் உதவி செய்தனர்.

Related Stories: