சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.1,480 குறைந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.185 குறைந்து ரூ.15,465க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.1,480 குறைந்து ரூ.1,23,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.80 குறைந்திருந்த நிலையில் மாலையில் ரூ.1480 குறைந்துள்ளது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.315க்கு விற்பனை செய்யப்படுகிறது
தங்கம் விலை கடந்த 3 வாரத்திற்கும் மேலாக ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த சனிக்கிழமை காலையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2400க்கும், மாலையில் பவுனுக்கு ரூ.2800 உயர்ந்தது. ஒரு பவுன் ரூ.1,24,400க்கு விற்பனையானது.
இதேபோல வெள்ளியும் காலை, மாலை என ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.25 ஆயிரம் உயர்ந்தது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை பங்கு சந்தைகளுக்கு விடுமுறை நாளாகும். ஆனால், ஞாயிற்றுக்கிழமையும் தங்கம் விலை உயர்ந்து நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.
ஞாயிற்றுக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.225 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,775க்கும், பவுனுக்கு ரூ.1800 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 26,200க்கும் விற்பனையானது.ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலே இந்த விலை உயர்வுக்கு காரணமாக கூறப்பட்டது. இன்னும் விலை அதிகரிக்க தான் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் வாரத்தின் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை திடீரென குறைந்தது. அதாவது நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.115 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,660க்கும், பவுனுக்கு ரூ.920 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,25,280க்கும் விற்பனையானது. வெள்ளி விலையும் நேற்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.315க்கும், கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைந்து பார் வெள்ளி 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
அதே போல் இன்று காலையும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.1,25,200க்கு விற்பனையானது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.15,650க்கும், வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.315க்கும், ஒரு கிலோ ரூ.3.15 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று 2வது முறையாக தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.1,480 குறைந்துள்ளது. தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.80 குறைந்திருந்த நிலையில் மாலையில் ரூ.1480 குறைந்து ரூ.1,23,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.185 குறைந்து ரூ.15,465க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.315க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
