தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேஷியாவிலும் இந்தத் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. உலகிலேயே ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தோனேசியாவும் இருக்கிறது. இந்த நிலையில்தான் அந்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும், மதிய உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட பிரபுவோ சுபியான்தோ, ”இந்தோனேஷியாவில் உள்ள 3 குழந்தைகளில் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருக்கிறார். இதனை களைய ஊட்டச்சத்து நிறைந்த இலவச மதிய உணவு 8.3 கோடி குழந்தைகளுக்கு வழங்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
அவருடைய இந்த கனவுத் திட்டத்தை நிறைவேற்றும் விதமாக சோதனை அடிப்படையில் மேற்கு ஜாவாவில் இருக்கும் சுகவிலில் உள்ள 20 பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்பட்டது. அப்போது சாதம், வறுத்த காய்கறிகள், வேகவைத்த முட்டை, பால் மற்றும் பழங்கள் என ஒவ்வொரு நாளும் 3,200 பேருக்கு வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த திட்டம் நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 17 ஆயிரம் தீவுகள் இணைந்த ஒரு நாட்டில் 8.3 கோடி குழந்தைகளுக்கு நாள்தோறும் மதிய உணவு வழங்கப்பட இருக்கிறது. இதேபோல், கர்ப்பிணிகளுக்கும் இலவசமாக மதிய உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டை போல இந்தோனேஷியாவிலும் இலவச மதிய உணவு: புதிய திட்டம் தொடக்கம் appeared first on Dinakaran.