திருவள்ளூர் அருகே சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் மறியல்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் சத்திரம் சாலையை போளிவாக்கம் புதுகண்டிகை, குன்னத்தூர், பள்ளக் காலனி, குன்னத்தூர், மேட்டுக் காலனி, அழிஞ்சிவாக்கம், ஆஞ்சிவாக்கம் மேட்டுக் காலனி, பூவேலி குப்பம் மேட்டுச்சேரி, வெள்ளக்காவா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். போளிவாக்கம் சத்திரம் பகுதியில் இருந்து அழிஞ்சிவாக்கம், வெள்ளகால்வாய் வரை பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தில் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நிறைவு பெற்றது.

தற்போது சாலையின் இரு பக்கமும் தாழ்வாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. மேலும் இவ்வழியாக இயக்கப்பட்ட அரசுப் பேருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று காலை 50க்கும் மேற்பட்டோர் போளிவாக்கம் சத்திரம் – வெள்ளகால்வாய் சாலையில், அழிஞ்சிவாக்கம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள் உடனடியாக சாலையின் இரு பக்கமும் தாழ்வாக உள்ள பகுதிகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர்.

The post திருவள்ளூர் அருகே சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் மறியல் appeared first on Dinakaran.

Related Stories: