மதுரை, ஜன. 6: தமிழக பள்ளிகல்வித்துறை சார்பில் மாநில அளவிலான 65வது குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள், மதுரை ரேஸ்கோர்ஸ் விளையாட்டு அரங்கில் இன்று (ஜன.6) தொடங்குகிறது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில், மாநில அளவில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்பர். இவர்களுக்கான பல்வேறு வகை விளையாட்டு போட்டிகள் மதுரையில் உள்ள தனியார் பள்ளி மைதானம் மற்றும் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளன.
இதில் கால்பந்து, வளைகோல் பந்து, கூடைப்பந்து, கையுந்து பந்து, கபடி, பூப்பந்து, கோகோ, இறகுபந்து, மேசைபந்து, டென்னிஸ், எறிபந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. வௌியூர்களில் இருந்து போட்டியில் கலந்து கொள்ள வரும் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக தங்குமிடம், மூன்று வேளை உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மாவட்ட பள்ளிகல்வித்துறை சார்பில் வழங்கப்படும். இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் பரிசுக்கோப்பைகள் வழங்கப்படும்.
The post பள்ளிகல்வித்துறை சார்பில் மாநில விளையாட்டு போட்டிகள்: மதுரையில் இன்று தொடக்கம் appeared first on Dinakaran.
