கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் அலன் அலெக்ஸ் (32). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் கோழிக்கோடு காக்கூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அடிக்கடி ஆபாச வீடியோவை அனுப்பி வந்துள்ளார்.
இது குறித்து அந்த மாணவி தன்னுடைய பெற்றோரிடம் கூறினார். அதிர்ச்சியடைந்த அவர்கள், அலன் அலெக்சை கையும் களவுமாகப் பிடிக்க திட்டமிட்டனர்.
இதன்படி அந்த மாணவியின் மூலம் அலன் அலெக்சிடம் நைசாக பேசி கோழிக்கோட்டுக்கு வரவழைத்தனர். இதன்படி உல்லாச ஆசையால் காரில் அங்கு வந்த டாக்டர் அலன் அலெக்ஸ், அந்த மாணவியை தன்னுடைய காரில் ஏற்றிச் செல்ல முயன்றார். அப்போது அங்கு மறைந்திருந்த மாணவியின் உறவினர்கள் பாய்ந்து சென்று அலன் அலெக்சை மடக்கி பிடித்தனர். பின்னர் அவருக்கு தர்மஅடி கொடுத்தனர்.
தொடர்ந்து கோழிக்கோடு வெள்ளயில் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று டாக்டர் அலன் அலெக்சை கைது செய்தனர். பின்னர் அவரை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post பள்ளி மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய டாக்டருக்கு தர்மஅடி appeared first on Dinakaran.