பொங்கல் பரிசு தொகுப்புக்காக நேரடி கொள்முதல்

மன்னார்குடி, ஜன. 4: பொங்கல் பரிசு தொகுப்புக்கா கரும்பு நேரடி கொள் முதல் செய்வதற்காக செங்கரும்பு வயலில் கலெக்டர் சாரு நேரில் ஆய்வு செய்தார். தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் கூட்டுறவு சங்கங்களின் மூலம் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு முழு கரும்பு வழங்க ரூ 77.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு செங்கரும்பு சாகுபடி செய்திருந்த விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, நீடாமங்கலம், திருவாரூர் மற்றும் குடவாசல் ஒன்றியங்களில் சுமார் 75 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் செங் கரும்புகள் சாகுபடி செய்துள்ளனர். தற்போது இந்த கரும்புகள் பொங்கல் பண்டிகை அறுவடைக்காக தயார்நிலையில் உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் 3 லட்சத்து 92 ஆயிரத்து 203 பேருக்கு நடப்பாண்டில் வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு முழு செங்கரும்பும் சேர்த்து வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், மன்னார்குடி அடுத்த நெடுவாக்கோ ட்டை கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள செங்கரு ம்புகளை மாவட்ட கலெக்டர் சாரு  நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன்மூலம் செங்கரும்பை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யும் பணியை விரைவில் கூட்டுறவு துறையினர் மேற்கொள்ள உள்ளனர்.ஆய்வின்போது, கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட இணை ப்பதிவாளர் சித்ரா, வருவாய் கோட்டாட்சியர் யோகேஸ்வரன், துணைப்பதிவாளர் பாத்திமா சுல்தானா, வட்டாட்சியர் கார்த்திக் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

The post பொங்கல் பரிசு தொகுப்புக்காக நேரடி கொள்முதல் appeared first on Dinakaran.

Related Stories: