நாகப்பட்டினம் அருகே ஒரத்தூர் சிதம்பரனார் அரசு உதவி பெறும் பள்ளியில் வாசிப்பு மராத்தான்

நாகப்பட்டினம்,ஜன.4: இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலேவின் பிறந்த நாளை முன்னிட்டு நாகப்பட்டினம் அருகே ஒரத்தூர் சிதம்பரனார் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் வாசிப்பு மராத்தான் நடந்தது.

சாவித்திரிபாய் புலே ஒரு சமூக சீர்திருத்தவாதியும், கவிஞரும் ஆவார். இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என அழைக்கப்படுகிறார். இவர் தன் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் இணைந்து ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். இவர்கள் பெண் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவிற்கு அருகிலுள்ள பிடெ வாடாவில் கடந்த 1848ம் ஆண்டு நிறுவினர்.

சாவித்திரி பாய் அவர்களின் பணியை மாணவர்கள் உணரும் வகையில், அவருடைய கல்வி சேவையை பாராட்டு வகையில், மாணவர்களின் வாசிப்புத்திறனை அதிகப்படுத்தும் விதமாகவும் நேற்று நாகப்பட்டினம் அருகே ஒரத்தூர் சிதம்பரனார் அரசு உதவி பெறும் பள்ளியில் வாசிப்பு மராத்தான் நடந்தது. மதிய உணவு இடைவேளை மதியம் 1 மணி தொடங்கி 2 வரை மாணவர்கள் தொடர்ச்சியாக சாவித்திரிபாய் புலே பற்றிய நூலை வாசித்தனர். தலைமை ஆசிரியர் சிவா தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் பாலசண்முகம் முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு இயக்க கலந்தாய்வு கூட்டம்
நாகப்பட்டினம், ஜன. 4: தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் வேளாங்கண்ணியில் நடந்தது. மாவட்ட செயலாளர் ஸ்டீபன்சன் தலைமை வகித்தார். நிறுவன தலைவர் ரோசன், மாநில செயலாளர் திருப்பதி, டெல்டா மண்டல செயலாளர் குணசேகரன் ஆகியோர் பேசினர்.

நுகர்வோர் உரிமைகளும், கடமைகளும், நுகர்வோரும் சரியான தேர்வு செய்தல், நலத்திட்டங்களை எவ்வாறு பெறுவது, ,நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், நுகர்வோரும் மற்ற நுகர்வோர் சட்டங்களும், நுகர்வோர் என்பவர் யார் என்பதனை புரிய வைத்தல், நுகர்வோரின் உரிமைகளையும், கடமைகளையும் அறிய வைத்தல், சிறந்த நுகர்வோராக உதவுதல், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மற்றும் பிற நுகர்வோர் சட்டங்கள் பற்றி அறிந்து கொள்ளச் செய்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

The post நாகப்பட்டினம் அருகே ஒரத்தூர் சிதம்பரனார் அரசு உதவி பெறும் பள்ளியில் வாசிப்பு மராத்தான் appeared first on Dinakaran.

Related Stories: