காவிரி வடிநில பாசன கால்வாய் சிறப்பு தூர்வாரும் பணிக்கான மதிப்பீடுகளை விரைந்து தயாரித்து அரசுக்கு வழங்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் துறை ரீதியான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் 2021-2022 முதல் 2024-2025 வரையிலான ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதேபோல் 2025-2026ம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள புதியப் பணிகள் குறித்து பொறியாளர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. பின்னர் கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது: நிலுவையிலுள்ள பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். மேலும், காவிரி வடிநில பகுதிகளிலுள்ள பாசனக் கால்வாய்களில் மேற்கொள்ளப்படவுள்ள சிறப்பு தூர்வாரும் பணிக்கான மதிப்பீடுகளை விரைந்து தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இக்கூட்டத்தில், செயலாளர் மணிவாசன், காவிரி தொழில்நுட்ப குழுமத் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post காவிரி வடிநில பாசன கால்வாய் சிறப்பு தூர்வாரும் பணிக்கான மதிப்பீடுகளை விரைந்து தயாரித்து அரசுக்கு வழங்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: