பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் கனிமொழி எம்.பி

சென்னை:திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத்தலைவருமான கனிமொழி கருணாநிதி தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள இல்லத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். கனிமொழிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். துர்கா ஸ்டாலினும் கனிமொழிக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் சென்னை சிஐடி காலனியில் உள்ள இல்லத்தில் கனிமொழியை நேரில் சந்தித்து திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, தங்கம் தென்னரசு,எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பி.கே.சேகர்பாபு, கீதா ஜீவன், டி.ஆர்.பி.ராஜா, அனிதா ராதாகிருஷ்ணன், ஆர்.காந்தி, எம்பிக்கள் தயாநிதிமாறன், தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, செல்வம், அருண் நேரு, ராணி ஸ்ரீ குமார், முரசொலி. சண்முகம், அந்தியூர் செல்வராஜ், அப்துல்லா.

கனிமொழி சோமு, கிரிராஜன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, திமுக இணை­ அ­மைப்­புச்செய­லா­ளர் அன்­ப­கம் கலை, எம்பி கிரிராஜன், தலைமை நிலைய அலுவலக செயலாளர் துரைமுகம் காஜா, துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின், திமுக செய்தி தொடர்பாளர் குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் மனோ தங்கராஜ், மோகன், பரந்தாமன், மயிலை த.வேலு, வெற்றியழகன், எழிலன், ஜி.வி.மார்க்கண்டேயன், எம்.சி.சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ், கே.செல்வராஜ், கோ.தளபதி, ராஜா, தாயகம் கவி, வெற்றியழகன், தமிழரசி, உள்ளிட்ட எம்எல்ஏக்கள், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார்,

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிற்றரசு, சென்னை மேற்கு மாவட்ட துணை செயலாளர் ஆர்.என்.துரை, முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, திமுக மகளிர் அணி தலைவர் விஜயா தாயன்பன், மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், திமுக மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி, மகளிர் அணி இணைச் செயலாளர் குமரி விஜயகுமார், மகளிர் தொண்டரணி இணைச் செயலாளர் தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. மற்றும் திமுக மகளிர் அணி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.  முன்னதாக அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் கனிமொழி மரியாதை செலுத்தினார்.

The post பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் கனிமொழி எம்.பி appeared first on Dinakaran.

Related Stories: