அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பஸ் பெர்மிட் சஸ்பெண்ட்: கண்காணிக்க 30 குழுக்கள் தமிழக அரசு உத்தரவு

சென்னை: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ் பெர்மிட்டை சஸ்பெண்ட் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தாண்டு பொங்கல் பண்டிகை வரும் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இம்முறை பொங்கல் பண்டிகைக்கு 6 நாள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. அரசு சிறப்பு பஸ்களையும் இயக்குகிறது. இருப்பினும் ஆம்னி பேருந்துகள் சில கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக ஒவ்வொரு ஆண்டும் புகார்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க போக்குவரத்து ஆணையரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதிக கட்டணம் வசூலிப்பது, வரி நிலுவை, அதிக சுமை ஏற்றவது, பெர்மிட் இல்லாமல் இயக்குவது போன்ற விதிமீறல்கள் நடக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க, தமிழகம் முழுவதும், 30க்கும் மேற்பட்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த ஒவ்வொரு குழுவிலும் 3 பேர் இருப்பார்கள்.

இக்குழுவினர் நெடுஞ்சாலை மற்றும் முக்கிய பேருந்து நிலையங்களில் திடீர் சோதனை நடத்துவர். அதிக கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள் மீது அபராதம் விதிப்பது, அவற்றின் பெர்மிட்டை சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. விதி மீறலில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளை சிறை பிடித்து பறிமுதல் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

The post அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பஸ் பெர்மிட் சஸ்பெண்ட்: கண்காணிக்க 30 குழுக்கள் தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: