திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல கோயில்களுக்கு குடமுழுக்கு தருமபுர ஆதீனம் பாராட்டு

திருக்கோவிலூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட கீழையூர் பகுதியில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரட்டானேஸ்வரர் கோயிலில் தருமபுர ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீ லஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சாமிகள் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஆதீனத்தின் மணிவிழாவை முன்னிட்டு 300 தளங்களை 30 நாட்களில் தரிசனம் செய்ய வேண்டும் என்கிற நோக்கோடு தல யாத்திரை மேற்கொண்டு, ஒவ்வொரு நடு நாட்டுத் தலங்கள், தொண்டை நாட்டுத் தலங்களை நிறைவு செய்து, சோழ நாட்டுத் தளங்களை பாதி முடித்து அடுத்து பாண்டிய நாடும், கொங்கு நாட்டு தல யாத்திரையாக வந்துகொண்டிருக்கிறோம்.

சமீபத்தில் இந்த கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதற்கு பிறகு பல கோயில்களுக்கு குடமுழுக்கு விழாவினை செய்கிறார்கள். மற்ற ஆட்சி காலங்களில், குடமுழுக்கு விழாக்கள் நடைபெறவில்லை. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கிராமங்கள் தோறும் பல கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. பல கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்று முடிந்துள்ளது. இது ஒரு சிறப்புக்குரியது, பாராட்டுக்குரியது என்றார்.

 

The post திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல கோயில்களுக்கு குடமுழுக்கு தருமபுர ஆதீனம் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: