இதை சற்றும் எதிர்பார்க்காத பணியில் இருந்த காவலர், உடனே சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். அதன்படி கோட்டை மற்றும் மெரினா போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் தலைமை செயலகம் மற்றும் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தினர். இதில் எந்த ெவடிகுண்டும் சிக்கவில்லை. இதனால் இது வெறும் புரளி என தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் இரவு நேரம் விடுக்கப்பட்டதால் தலைமை செயலகத்தில் ஊழியர்கள் யாரும் இல்லாததால் பதற்றமான நிலை ஏற்படவில்லை.
இருந்தாலும் டிஜிபி அலுவலகத்தில் சற்று பதற்றமான நிலை இருந்தது. அதைதொடர்ந்து கோட்டை மற்றும் மெரினா போலீசார் சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் காவல்கட்டுப்பாட்டு அறைக்கு வந்த எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மிரட்டல் விடுத்த நபர் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பேசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் விருதுநகர் மாவட்ட காவல்துறையுடன் இணைந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை கைது செய்ய சென்னை பெருநகர துறையில் இருந்து தனிப்படை ஒன்று விரைந்துள்ளது.
The post சற்று நேரத்தில் வெடிக்கும் எனக்கூறி இணைப்பு துண்டிப்பு தலைமை செயலகம், டிஜிபி அலுவலகத்திற்கு குண்டு மிரட்டல்: விருதுநகர் விரைந்தது தனிப்படை appeared first on Dinakaran.