திண்டுக்கல்லில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

திண்டுக்கல், ஜன. 3: திண்டுக்கல் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் பொங்கல் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. தெற்கு கோட்ட பொறியாளர் சாந்தி, வடக்கு கோட்ட பொறியாளர் கலைவேந்தன் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்து 60க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

தமிழகத்தில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு மின்சார வாரியத்தை மிகவும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். மின் இணைப்பு கேட்பவர்களுக்கு உடனடியாக மின் இணைப்புகள் வழங்கி சாதனை படைத்து வருகிறது. இவ்வாறு பேசினார். இந்நிகழ்ச்சியில் துணை தலைவர் மகேஸ்வரன், துணை செயலாளர் நடராஜ், கோட்ட செயலாளர்கள் வின்சென்ட், தங்கதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திட்ட பொருளாளர் நந்தகுமார் செய்திருந்தார்.

The post திண்டுக்கல்லில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: