இந்நிலையில் விடுதியில் உள்ள மாணவிகளின் குளியலறையில் கேமராக்கள் வைத்து ஆபாச வீடியோக்கள் எடுக்கப்பட்டிருப்பதாக நேற்று முன்தினம் புகார் எழுந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ, மாணவிகள் கல்லூரி விடுதி வளாகத்தில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மேட்சல் போலீசார் அங்கு வந்து மாணவர்களை சமாதானப்படுத்தினர். அப்போது மாணவ, மாணவிகள், ‘சுமார் 300 மாணவிகளின் வீடியோக்களை ஆபாசமாக பதிவு செய்துள்ளதாகவும், அவை சமூக வலைதளங்களில் கசிந்தால் எம்எல்ஏ மல்லாரெட்டிதான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்’ எனக்கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். பின்னர் விடுதி ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஊழியர்களிடம் இருந்து 12 பேரின் செல்போன்களை பறிமுதல் செய்து நடத்திய விசாரணையில், விடுதி சமையலறை ஊழியர்களுக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சமையல் ஊழியர்கள் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தெலங்கானா மாஜி அமைச்சருக்கு சொந்த கல்லூரியில் மாணவிகளின் விடுதி குளியலறையில் கேமரா வைத்து 300 ஆபாச வீடியோ பதிவு: சமையல் ஊழியர்கள் 5 பேர் கைது appeared first on Dinakaran.