சிவகிரி,ஜன.3: சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகரச்செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். விவசாய சங்க மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், நகர துணைச்செயலாளர் குருவு, தென்காசி மாவட்ட குழு உறுப்பினர் கண்ணன் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி மாவட்டச் செயலாளரான வக்கீல் இசக்கிதுரை, திமுக மருத்துவர் அணி மாநில துணைச்செயலாளர் செண்பகவிநாயகம், மதிமுக வாசுதேவநல்லூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் சிவசுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் ஒன்றியச் செயலாளர் நடராஜன், அதிமுக ஓபிஎஸ் அணியின் காசிராஜன், நாம் தமிழர் கட்சியின் கருப்பசாமி, இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் தென்காசி மாவட்டச் செயலாளர் சண்முகவடிவு, ஏஐடியுசி வாகன ஓட்டுநர் சங்கச் செயலாளர் செல்வம், அகில இந்திய வாலிபர் சங்க தென்காசி மாவட்ட குழு உறுப்பினர் பால்சாமி, சிவகிரி நகரச் செயலாளர் தர்மர் உள்ளிட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
The post சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.